Saturday, November 13, 2010

காங்கிரஸார் மறியல்

காரைக்கால், நவ. 12 : சோனியாகாந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக ஆர்எஸ்எஸ் இயக்க முன்னாள் தலைவர் சுதர்சனத்தைக் கண்டித்தும், அந்த இயக்கத்தை தடை செய்யக் கோரியும், சுதர்சனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட 95 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
÷காரைக்கால் அரசலாறு பாலம் அருகே காரைக்கால்- நாகப்பட்டினம் சாலையில் நடைபெற்ற இந்த மறியலில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே. கணபதி, காங்கிரஸ் நிர்வாகிகள் வி.எம்.சி.வி. கணபதி, மாநில பொதுச் செயலர் ஏ.வி.ஜெ.செல்வமுத்துக்குமரன், மாவட்டத் தலைவர் ஏ. பாஸ்கரன், என்.ஜி.ஆர். இளங்கோவன், இ. தங்கவடிவேல், எல்.எஸ்.பி. சோழசிங்கராயர், ஒய். இஸ்மாயில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மறியலில் கலந்து கொண்டனர்.
÷மறியலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ உள்ளிட்ட 95 பேரை போலீஸôர் கைது செய்து, கோட்டுச்சேரி திருமண அரங்குக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

நன்றி: தினமணி

கால்நடை உரிமையாளர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

காரைக்கால், நவ. 12: காரைக்கால் நகரில் முக்கிய சாலைகளில், கடற்கரை பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் எச்சரித்தார்.
÷இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: காரைக்காலில் தற்போது கடற்கரைப் பகுதி, கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகள் நேரிடுகின்றன.
÷எனவே, கால்நடை உரிமையாளர்கள் அவற்றை வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். மீறி இதுபோல சாலைகளில் திரியவிட்டால் காவல்துறை கால்நடைகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்.
÷காரைக்கால் நகரில் தற்போது 3 இடங்களில் போக்குவரத்து தானியங்கி சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல, மேலும் 4 இடங்களில் சிக்னல் பொருத்தப்படவுள்ளது என்றார் ஸ்ரீகாந்த்.
நன்றி: தினமலர்

கால்நடை உரிமையாளர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

காரைக்கால்hthtihtanih, நவt. 12: காரைக்கால் நகரில் முக்கிய சாலைகளில், கடற்கரை பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் எச்சரித்தார்.