காரைக்கால், நவ. 12: காரைக்கால் நகரில் முக்கிய சாலைகளில், கடற்கரை பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் எச்சரித்தார்.
÷இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: காரைக்காலில் தற்போது கடற்கரைப் பகுதி, கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகள் நேரிடுகின்றன.
÷எனவே, கால்நடை உரிமையாளர்கள் அவற்றை வீட்டுக்குள்ளேயே வளர்க்க வேண்டும். மீறி இதுபோல சாலைகளில் திரியவிட்டால் காவல்துறை கால்நடைகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்.
÷காரைக்கால் நகரில் தற்போது 3 இடங்களில் போக்குவரத்து தானியங்கி சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல, மேலும் 4 இடங்களில் சிக்னல் பொருத்தப்படவுள்ளது என்றார் ஸ்ரீகாந்த்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment